Periods என்றாள் என்ன?
பெண்களின் முதல் மாதவிடாய் பொதுவாக 10-12 வயதில் நடக்கும். ஆனால் கால மாற்றதினாலும், உணவு பலக்க மாற்றதினாலும் மாதவிடாய் செரியான வயதில் நடப்பதில்லை.
பெரும்பாலான பெண்களுக்கு இது ஒவ்வொரு 28 நாட்களுக்கும் அல்லது அதற்கும் மேலாக நடக்கும், ஆனால் மாதவிடாய் சுழற்சியின் 21 ஆம் நாள் முதல் 40 ஆம் நாள் வரை இதை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அடிக்கடி மாதவிடாய் ஏற்படுவது பொதுவானது.
மாதவிடாய் சுமார் 2 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும், ஒரு மாதவிடாய் காலத்தில் பெண்கள் 3 முதல் 5 தேக்கரண்டி இரத்தத்தை இழக்கிறார்கள்.
ஏன் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுகிறது ?
உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட காரணமக அமைகிறது. இந்த ஹார்மோன் மாற்றங்கள் பெண்கள் உடலில் கருப்பை முட்டை (அம்மாவிடமிருந்து) மற்றும் விந்தணுக்கள் (அப்பாவிடமிருந்து) இணைக்கப்பட்டு ஒரு குழந்தையாக வளரத் தயாராகிவிட்டது என்பதை உணர்த்துகிது.
மாதவிடாய் வருவதற்கான அறிகூறிகள் :
*உடல் வீங்கியது போன்ற உணர்வு.
*மார்பக மென்மை.
*மனம் தடுமாற்றம்.
*மற்றவர்கள் மீது எரிச்சல் உணர்வு.
*செக்ஸ் மீதான ஆர்வம் இழப்பு.
பெண்கள் மாதவிடாய் காலங்களில் சாப்பிட வேண்டியவை ?
கீரை, காய்கறிகள் மற்றும் பழங்கள்
பெண்களின் மாதவிடாய் காலத்தில், குறிப்பாக பெண்களின் மாதவிடாய் ஓட்டம் அதிகமாக இருந்தால், உங்கள் உடம்பில் உல்ல இரும்பு சத்துக்களின் அளவு குறைந்து விடுகிறது. இது உடல் வலி, சோர்வு மற்றும் தலைச்சுற்றலுக்கு வழிவகுக்கிறது. கீரை மற்றும் காய்கறிகள் அதை எதிர்த்துப் போராட உதவுகின்றன. தர்பூசணி மற்றும் வெள்ளரி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
கோழி மற்றும் மீன்
இதில் புரதம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து உடைய பொருட்களை உட்கொள்வது மாதவிடாய் காலத்தில் இரும்பு அளவு குறைவதை எதிர்க்கும்.
நட்ஸ் மற்றும் டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட்டில் மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் மாதவிடாய் காலங்களில் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.பாதாம் முந்திரி போன்ற கொட்டைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் அவற்றையும் சேர்த்து கொள்வது நல்லது.
தண்ணீர்
மாதவிடாய் காலங்களில் குடிநீர் முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். நீரேற்றத்துடன் இருப்பது நீரிழப்பு தலைவலியைப் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். இயல்பாகவே நீர் அருந்துவது உடலுக்கு நன்மைகள் விளைவிக்கும், எனினும் மாதவிடாய் காலங்களில் நீர் அருந்துவதினால் உடல் சூடு குறையும், இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் புத்துணர்ச்சி அளிக்கும்.
மாதவிடாய் காலங்களில் தவிர்க்க வேண்டியவை
உப்பு மற்றும் காரமான உணவு
பொரித்த உணவுகள் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட ரெடிமேட் ஸ்நாக்ஸ்களில் உப்பு மற்றும் சோடியம் அதிகம் இருப்பதால் அவற்றைத் தவிர்க்கவும். அதிகப்படியான உப்பை உட்கொள்வது மாதவிடாய் காலத்தில் உடல் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது.
காபி
காபி, எனர்ஜி பானங்கள் தலைவலி மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும் என்பதாள் இது போன்ற பானங்களைத் தவிர்ப்பது நல்லது. மேலும் செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என்பதனால், மாதவிடாய் காலங்களில் மிக எரிச்சலான உணர்வை உண்டாக்கும். எனவே இவற்றை உட்கொல்லாமல் இருப்பது உடலுக்கு நல்லது.
மது
மோசமான தலைவலி முதல் உடல் சோர்வு வரை ஆல்கஹால் உடலில் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது.
ஒரு பெண் தனது வாழ்நாளில் சராசரியாக 500 மாதவிடாய் காலங்களை எதிர்கொள்கிறாள்.
அதாவது 3500 நாட்கள், இதற்கு சுமார் 11000 சானிடரி நாப்கின் தேவைபடுகிறது.
மேலே பதிவிடப்பட்டுல்ல கட்டுரை படித்தவர்கள் தங்களது கருத்தை பதிவிடுங்கள் மற்றும் கீழே கேட்கபட்டுல்ல கேள்விக்கு பதில் அளிக்கவுவம்.
*பெண்கள் மாதவிடாய் காலத்தில் கோவிலுக்கு செல்லலாமா? செல்ல கூடாதா?
இது போண்ற முக்கியமான தகவலுக்கு Mystcon Telegram channel லில் join செய்யுகள். Click Here To Join
NOTE :
NOTE :
மேலே உள்ள கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, உங்கள் உடல்நலம் அல்லது மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது பிற தகுதிவாய்ந்த சுகாதார நிபுணரின் வழிகாட்டுதலைப் பெறவும்.
Post a Comment
Post a Comment