How to clean men's private part properly in Tamil | ஆணுறுப்பை எவ்வாறு சுத்தமாக பார்த்துகொள்வது?

Post a Comment

 ஆணுறுப்பை எவ்வாறு சுத்தமாக பார்த்துகொள்வது?


பிறப்புறுப்புகளை சுத்தம் செய்வது அவசியமற்றது என்று பெரும்பாலான ஆண்கள் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். ஆண்களின் ஆண்குறியை பல நாட்களுக்கு முறையாக சுத்தம் செய்யாத இருக்கும் பட்சத்தில், ஆண்குறியில் பல தொற்றுகள் மற்றும் கிருமிகள் உண்டாவதற்க்கு வாய்ப்பு உள்ளது.


ஆண்கள் அனைவரும் தினமும் குளித்து வந்தாலும், பலர் தங்கள் பாகங்களை செரியான முறையில் சுத்தம் செய்வதில்லை. பிறப்புறுப்புகள் அதிக நேரம் மூடியிருப்பதால், பிறப்புறுப்பு மற்றும் அந்தரங்கப் பகுதிகளிள் மற்ற பகுதியை விட சற்று அதிகம் வியர்க்கிறது, இதனால் அந்த பகுதிகளிள் தொற்று உண்டாக வாய்ப்பு உள்ளது.

ஆண்கள் தங்கள் ஆண் உறுப்புகளை சுத்தம் செய்யும் போது நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில வழிமுறைகளை கீலே பதிவேற்றம் செய்து இருகிறோம்.

அந்தரங்க முடியை அகற்றவும்


ஆணுறுப்பைச் சுற்றியுள்ள முடியில், உடலில் இருந்து வெளியேறும் வியர்வை துளிகள் தேங்கிவிடுகிறது. இதனால் ஆணுறுப்பில் அழுக்கு மற்றும் கிருமிகள் சேருவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் ஆணுறுப்பைச் சுற்றியுள்ள முடியை பராமரிப்பது மிகவும் அவசியமான செயலாகும். சிறிய கத்தரிக்கோல் அல்லது டிரிம்ர் கொண்டு கவனமாகப் இதைச் செய்யலாம். இது தவிர, பலர் ஹேர் ரிமூவல் க்ரீமையும் பயன்படுத்தி தங்களது ஆணுறுப்பை சுத்தம் செய்கிறார்கள்.

சரியான வழியில் ஆண்குறியை சுத்தம் செய்ய வேண்டும்


நோய்க்கிருமிகள் ஏற்படாமல் பிறப்புறுப்பை பாதுகாக்க, ஆண்குறியின் மேல் தோல்லை மெதுவாக அகற்றி, அந்த இடத்தில் வெதுவெதுப்பான நீரிரை ஊற்றி கழுவவும். ஆண்குறியைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையான தசையினால் ஆனது எனவே இரசாயனங்கள் கொண்ட சோப்புகளை உபயோகிப்பது தீங்கு விளைவிக்கும். இக்காரணத்தினால், மூலிகை அல்லது இரசாயனங்கள் இல்லாத சோப்புகளைப் பயன்படுத்துவதும் மற்றும் ஆண்குறியை மென்மையான கைகளால் கழுவி சுத்தம் செய்வதும் நல்லது.

ஆண்குறியை உலர்த்துதல்


வெதுவெதுப்பான நீரில் கழுவியவுடன், எப்போதும் ஆண்குறியை சுத்தமான மற்றும் காய்ந்த துணியால் துடைக்கவும். கழுவிய பிறகு ஆண்குறியை ஈரமாக விட்டு விட்டால் தொற்றுநோய் உண்டாக வாய்புகள் உண்டு. எனவே இச்செயலை தவறாமல் செய்ய வேண்டும்.

சிறுநீர் கழித்த பிறகு ஆண்குறியை கழுவவும்


சிறுநீரக தொற்றுநோய் மற்றும் கிருமி பரவுதலை தடுக்க, ஒவ்வொரு முறையும் சீறுநீர் கழித்த பிறகு ஆண்குறியை தண்ணீரில் கழுவுவது மிகவும் நல்லது. பொது கழிப்பறைகளைப் பயன்படுத்தினால் கழுவுவது சாத்தியமில்லை என்றாலும், டாய்லெட் பேப்பரைப் பயன்படுத்துங்கள். இதனால் மீதமுள்ள சிறுநீரின் துளிகள் உங்கள் உள்ளாடைகளில் தங்காது, இதனால் தொற்றுகிருமி பரவுவதற்கான வாய்ப்புகள் குறையும்.

அசுத்தமான உள்ளாடைகளை அணிய வேண்டாம்


ஆண்/பெண் இருபாலரும் குளியலுக்குப் பிறகும் எப்போதும் சுத்தமாக துவைத்த உள்ளாடைகளை அணியுங்கள். எப்போதும் நல்ல தரமான துணியாலான மற்றும் வசதியான உள்ளாடைகளைத் தேர்ந்தெடுக்கவும். ஆண்குறியை காயப்படுத்தக்கூடிய மிகவும் இறுக்கமான உள்ளாடைகளை அணிய வேண்டாம்

ஆண்குறியில் எண்ணெய் பயன்படுத்தவும்


ஆண்குறியைச் சுற்றியுள்ள தோலில் நேரடியாக காற்று படாததால் வரண்டு காணபடுகிறது. எனவே, அந்த இடத்தை சுத்தம் செய்த பிறகு, ​​​​ஆண்கள் வாசனை இல்லாத எண்ணெய் அல்லது குறைந்த ரசாயனங்கள் கொண்ட கிரீம்களை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
இது உடல் சூட்டையும் தடுகிறது.

உடலுறவுக்கு முன்னும் பின்னும் ஆண்குறியை சுத்தம் செய்தல்


உடலுறவுக்கு முன்னும் பின்னும் ஆண்குறியை சுத்தம் செய்வது மிகவும் முக்கியமான ஒன்று, ஆனால் அவ்வாறு செய்யாமல் இருப்பது பல நோய்களுக்கு வழிவகுக்கும். தங்களுக்கு மட்டுமல்லாது, தண்ணுடன் உடலுறவு வெய்பவர்களுக்கும் தொற்று அபாயத்தை அதிகரிக்கும்.

 

Related Posts

Post a Comment