Singapore to India direct money transfer through UPI and Pay now ... Tamil

Post a Comment
சிங்கபூர் வாழ் இந்திய ஊழியர்களுக்கு அசத்தல் அறிவிப்பு… UPI- PayNow மூலம் பண பரிவர்த்தனை..!

சிங்கப்பூரில் உள்ள இந்தியர்கள் இனிமேல் தங்கள் மாத வருமானத்தை  வங்கிக் கணக்குகளில் இருந்து இந்திய வங்கிக்கு  நேரடியாக பணத்தை செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது

எல்லை தாண்டிய பணம் பரிவர்த்தனையை எளிதாக்கும் வகையில், இந்தியாவும் சிங்கப்பூரும் இனைந்து கடந்த ஆண்டு டிஜிட்டல் கட்டண முறைகளான UPI மற்றும் PayNow ஆகியவற்றை ஒன்றாக இணைத்தன.

இந்நிலையில், NPCI அதாவது இந்திய தேசிய பண பரிமாற்ற கழகம் (NPCI) தற்போது இந்த வசதி BHIM, PhonePe மற்றும் Paytm ஆகியவற்றில் நடப்புக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த டிஜிட்டல் வசதியின் மூலம்  வேகமாகவும், பாதுகாப்பான முறையிலும் மேலும் சிறிய கட்டணத்தில் நிறைவான சேவையை பெற முடியும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

இத்திட்டதினால் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கும், இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணப்பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் என்பது நெட்டிசன்களின் கருத்து.

UPI மற்றும் PayNow இடையேயான எல்லை தாண்டிய இணைப்பின் மூலமாக, சிங்கப்பூரில் பணிபுரியும் இந்திய மக்கள் பண பரிவர்தனைகளை வேகமாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்த முடியும் என்று NPCI ஜனவரி 11 அன்று தெரிவித்துள்ளது.

தற்போதய அறிவிப்பின் படி ஆக்சிஸ் வங்கி, DBS வங்கி இந்தியா, ICICI வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகள் அந்த செயலிகள் மூலம் இந்தச் சேவையை வழங்குவதாகவும் மீதம் உல்ல வங்கிகள் விரைவில் இந்த இணைப்பில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் DBS Account யை பயண்படுத்தி கொண்டு இருந்தால் , உடணடியாக DBS Paylah App யை பதிவிரகம் செய்து , கீழே கொடுக்கபட்டுல்ல Promo code யை பயண்படுத்தி 5$ பெற்றுகொள்ளுகள்

Promo Code : RAT19V129

Related Posts

Post a Comment