20 வயதான ஊழியர் வினோத் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்
இந்த மாதம் தஞ்சோங் பகார் என்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 20 வயதான ஊழியர் வினோத் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இத்துயர சம்பவம் நடந்த நாள்ளன்று தஞ்சோங் பகாரில் கட்டிடம் இடிக்கும் பணி நடைபெற்றது. கட்டிடம் இடிந்து விழுந்தபோது வேலை நடைபெறும் இடத்திற்கு வெளியே ஊழியர் நடைபாதையில் வினோத் குமார் நடந்துகொண்டு இருந்ததாக வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
நடைபாதையில் நடந்து கொண்டிருந்த வினோத் குமார்க்கு தெரியாது அது தான் தன் இறுதி பயணம் என்று.
பற்பகள் 2 மணி அளவில் கட்டிடம் இடிந்து விழுந்த பின்னர் ஊழியர் வினோத் காணாமல் போனதாக கூறப்பட்டது.
பல மணிநேர தேடல் போராட்டத்திற்கு பின்னர் மாலை 6 மணியளவில் வினோத் குமார் இடிபாடுகளில் சிக்கி இருப்பது கண்டறியப்பட்டது.
ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக கூறபடுகிறது.
அவரின் இறப்புக்கு ஒட்டுமொத்த வெளிநாடு ஊழியர்களும் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்தனர்.
பல கனவுகளுடன் வாழ்வில் பெரிதாக சாதிக்கப்போவதாக சொந்த ஊரில் இருந்து சிங்கப்பூர் கிளம்பி வந்த இளைஞர் சவப்பெட்டியில் சடலமாக சென்றது காண்போரை கண்கலங்க வைத்தது.
வேலை செய்யும் இடங்களில் உரிய பாதுகாப்பு திட்டத்தை உரிதி செய்து கொண்டு பணியை மேற்கொள்ளுங்கள்.
அவரை இழந்து வாழும் அவரின் குடும்பத்திற்கு எந்த ஆறுதலும் நம்மால் சொல்ல முடியா விட்டாலும் அவருக்காக பிராத்தனை செய்வோம்.
Post a Comment
Post a Comment