Singapore beach new announcement from NEA to avoid swimming in two beaches in tamil

Post a Comment

சிங்கப்பூரில் உள்ள பொழுதுபோக்கு கடற்கரைகளுக்கு செல்வோர் கவனத்திற்கு .......!


சிங்கப்பூரில் வசிக்கும் மக்களுக்கு தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (NEA) கடற்கரை பற்றிய முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

சிங்கப்பூரில் உள்ள ஏழு பிரபலமான பொழுதுபோக்கு கடற்கரைகளின் தரத்தை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம்.


நடந்து முடிந்த சோதனையில் இரண்டு  கடற்கரை நீரில் நுண்ணுயிர் கிருமியின் அளவு அதிகரித்துள்ளதை அதிகாரிகள்  கண்டறிந்துள்ளனர்.


அந்த இரண்டு கடற்கரைகள் பாசிர் ரிஸ் பீச் மற்றும் செம்பவாங் பார்க் கடற்கரை ஆகும். ஆகையால் இந்த கடற்கரைகளிள்  நீச்சல் அடிக்க வேண்டாம் என்று பொதுமக்களை NEA அறிவுறுத்தியுள்ளது.


ஏனெனில், NEA எச்சரிக்கையின் படி அந்த நீரில் என்டோரோகோகஸ் பாக்டீரியா என்னும் நுண்ணுயிர் கிருமியின் அளவு அதிகரித்துள்ளதே காரணம்.


இதனால், இந்த தண்ணீரை உட்கொல்பவர்க்கு வயிற்று குடல் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.


அதே போல wakeboarding, windsurfing மற்றும் நீரில் மூழ்கும் விளையாட்டு பயிற்சிகளை மக்கள் மேற்கொள்ள வேண்டாம் எனவும் அது NEA அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.


மேலே குறிப்பிட்டுள்ள  விளையாட்டுகளில் ஈடுபடும்போது முழு உடல் அல்லது முகம் நீரில் மூழ்கியிருக்கும் என்பதால், கடல் நீரை உட்கொள்ளும் அபாயம் அதிகம் உல்லது என கூறப்பட்டுள்ளது.


இருப்பினும், படகோட்டம், கயாக்கிங் போன்ற விளையாட்டை உரிய அனுமதியுடன் தொடரலாம் என்று NEA கூறியது.


இருப்பினும், மற்ற ஐந்து கடற்கரைகளான ஈஸ்ட் கோஸ்ட் பார்க், சாங்கி, பொங்கோல், சிலேத்தர் தீவு மற்றும் சென்டோசா தீவு ஆகியவற்றின் நீரின் தரம் நல்ல நிலையில் இருப்பதாக NEA அமைப்பு கூறியுள்ளது.

Related Posts

Post a Comment