மின்சார வாரியம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பு கொண்டவர்களுக்கான இலவச மற்றும் மானிய மின்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மின் நுகர்வோர் இணைப்பு எண் உடன் ஆதார் எண் இணைப்பது அவசியம் என்று தமிழக மின்சார வாரியம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் லிங்க் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்க்கை கொண்டு மின் நுகர்வோர் இணைப்பு எண் உடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம்.
மின் முறைகேட்டைத் தவிர்க்க மின் நுகர்வோர் இணைப்பு எண் உடன் ஆதார் எண் இனைக்க வேண்டும் எனவும் இதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பு கொண்டவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரம் மற்றும் மானிய மின்சாரத்தை நிறுத்தி முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக 100 யுனிட் இலவச மின்சாரம் பெறுபவர்கள், குடிசை வீட்டில் வசிப்பவர்கள், விவசாயிகள், 750 யுனிட் இலவச மின்சாரம் பெறும் விசைத்தறி நுகர்வோர் மற்றும் 200 யுனிட் இலவச மின்சாரம் பெறும் கைத்தறி நுகர்வோர் என அனைவரும் தங்கள் மின் இணைப்பு எண் உடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனவும்
தனியார் தொற்சாலைகள், நிறுவனங்கள் போன்ற மின்சாரம் மானியம் பெறாதவர்கள் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் இல்லை என்றும் தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
Post a Comment
Post a Comment