சிங்கப்பூரில் சோதனை........! மசாஜ் சென்டர் தகாத சேவை வழங்கிய பெண்கள், சட்டத்தை மீறிய வெளிநாட்டவர்கள் SINGAPORE POLICE raid-massage-outletsசிங்கப்பூரில் நடந்த அதிரடி சோதனை நடவடிக்கையில் 62 பேர் கைது செய்யபட்டனர்

Post a Comment

62 பேர் கைது செய்யபட்டனர்

சிங்கப்பூரில் நடந்த போலீஸ் நடத்திய  அதிரடி சோதனை நடவடிக்கையில் ஆண்கள் பெண்கள் என 62 பேர் கைது செய்யப்பட்டதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது

பலேஸ்டியர் ரோடு, ஆர்ச்சர்ட் ரோடு, தாம்சன் ரோடு மற்றும் ரிவர் வேலி ரோடு ஆகிய இடங்களில் அமைந்துள்ள பல்வேறு மசாஜ் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் காவல்துரை அதிகாரிகள் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.


கடந்த பிப்ரவரி மாதம் 28 முதல் மார்ச் மாதம் 2 ஆம் தேதி வரை நான்கு நாள் நடந்த இந்த சோதனை நடவடிக்கையில் மொத்தம் 14 ஆண்கள் மற்றும் 48 பெண்கள் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர்.


அவர்களின் வயது குறைந்தபட்சம்  21 முதல் அதிகபட்சம்  78 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் காவல்துறை கூறியுள்ளது..


குறிப்பாக இதில் பெண்கள் தொடர்பான குற்றச் சட்டத்தின்கீழ், 23 மற்றும் 46 வயதுக்கும் இடைப்பட்ட 22 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.


மசாஜ் பார்லலின் பெயரில் பாலியல் சேவைகளை வழங்கியது, வெளிநாட்டு மனிதவளச் சட்டத்தின் (EFMA) கீழ் குற்றங்கள் செய்தது மற்றும் போதைப்பொருள் உள்ளிட்ட சந்தேக குற்றச் செயல்களுக்காக அவர்கள் அனைவரையும் காவல் துரை கய்து செய்தது.


விசாரணைகள் நடந்து வருகின்றன.


மேலும் இதுபோன்ற பதிவிற்க்கு நமது Whats app group இனையுங்கள்

Click here - c.what's app

Related Posts

Post a Comment