உங்கள் புகார்... ?
சிங்கப்பூரில் உல்ல நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் கொடுக்கும் புகார்களை பற்றி மனித வள அமைச்சர் "டான் சீ லெங்" நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ பதில் தந்திருக்கிறார்.
கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டு ஊழியர்களிடம் இருந்து என்னென்ன புகார்கள் வந்துள்ளன என்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்டது.
அதற்க்கு அமைச்சர் , பொதுவாக ஊழியர்கள் முன்வைக்கும் புகார்கள்:
* சில நிறுவணங்கள் சட்டவிரோதமாக மற்ற வேலைகளுக்கு அனுப்புவது.
* வெளிநாட்டு வேலைகாக லஞ்சம் தருவது.
* வெளிநாட்டு ஊழியர்கள் செலுத்திய பணத்தை முகவர் நிறுவனம் திரும்பக் கொடுக்காமல் இருப்பது.
* வெளிநாட்டவரை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்துவது
* அதிகச் சம்பளம் கொடுப்பதாகச் சொல்லி குறைந்த சம்பளம் கொடுப்பது.
கடந்த ஐந்தாண்டில் ஊழியர்கள் சொல்லும் முக்கிய ஐந்து புகார்கள் என்று மனிதவள அமைச்சர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
FAST எனும் முன்னணி ஆதரவுக் குழுவையும் FWMOMCare எனும் செல்போன் செயலியையும் அறிமுகம் செய்த பிறகு வெளிநாட்டு ஊழியர்களின் புகார்களை விரைந்து கன்டறிந்து அதற்கு விரைந்து தீர்வு காண முடிவதாக கூறியுள்ளார் .
Post a Comment
Post a Comment