Just Miss .....Next Time நமக்குதான்....
இறுதியாக நடந்த மூன்று டோட்டோ டிராவிலும் யாரும் வெற்றி பெறவில்லை என்பதால் முதல் பரிசு தொகை மிகப்பெரிய உச்சத்தை தொட்டது.
இந்நிலையில், முதல் பரிசை தட்டி தூக்கிய அந்த TOTO டிக்கெட், லிட்டில் இந்தியா அருகில் உள்ள பிளாக் 681 ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள RANGOON PROVISION SHOP கடையில் வாங்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது.
அக்டோபர் 2 ஆம் தேதி, திங்கள்கிழமை அன்று வெளியான இந்த குலுக்கல் முடிவில் system 8 ல் வாங்கபட்ட ஒரே ஒரு டிக்கெட் TOTO முதல் பரிசை தட்டிச் சென்றது.
முதல் பரிசான S$13,077,918 டாலரை அந்த ஒரே ஒரு அதிஷ்டசாலி நபர் தட்டிச்சென்றுள்ளார்.
எனினும் அந்த பகுதியில் பெரும்பாலும் இந்தியர்கள் தான் அதிகம் வசிப்பார்கள், அதனால் அவர்கள் தான் வெற்றிபெற்று இருப்பார்கள் என்ற செய்தி இந்திய மக்களிடம் தீயாக பரவி வருகிறது.
முதல் முறையாக சிங்கப்பூர் வரலாற்றில் குலுக்களில் மிக பெரிய தொகை வெற்றி பெற்றிருக்கிறது.
முதல் பரிசு பெற்ற அந்த டிக்கெட் System 8 முறையில் வாங்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்.
அதே போல, 2 ஆம் பரிசு 25 பங்காக பிரிக்கப்பட்டது, ஒவ்வொரு நபரும் S$62,991 வெள்ளியை பெறுவார்கள்.
நீங்கள் TOTO வாங்கும் நபரா....?
Post a Comment
Post a Comment