Illegal cigarate விற்று மாட்டிய ஊழியர்கள் .. தங்கும் விடுதியில் சிகரெட் விற்பனை.

Post a Comment

சிகரெட் விற்று உங்கள் குடும்பத்தை காப்பாற்ற போரிங்களா...?

சிங்கப்பூரில் சட்டத்திற்கு புறம்பான முறையில் வரி செலுத்தப்படாத சிகரெட்களை விற்பனை செய்ததாக வெளிநாட்டு நபர்கள் 5 பேர் பிடிபட்டுள்ளனர்.

துவாஸ் அவென்யூ 1 மற்றும் மாண்டாய் எஸ்டேட் அருகே சுங்க அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது நடந்த கண்காணிப்பு சோதனையில் 5 வெளிநாட்டு தொழிலாளிகளை கையும் களவுமாக சிங்கப்பூர் சுங்க அதிகாரிகள் பிடித்து கைது செய்தனர்.


இரு இடங்களில் நடைபெற்ற சோதனையில் மொத்தம், 53 சிகரெட்டு அட்டைப்பெட்டிகள் மற்றும் சுங்கவரி செலுத்தப்படாத 15 சிகரெட் பாக்கெட்டுகள் ஆகியவை சுங்க துரை அதிகாரிகலால் பறிமுதல் செய்யப்பட்டன.


பறிமுதல் செய்ய பட்ட சிகரட் பாக்கெட்டுகளின் சேவை மற்றும் சரக்கு வரி (ஜிஎஸ்டி) தொகை முறையே சுமார் $5,352 என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுமட்டுமல்லாமல் 3.3 கிலோ மெல்லும் புகையிலையும் சுங்க துரை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.


இச்சம்பவத்தில் சம்மந்த பட்ட 20 மற்றும் 37 வயதுக்கு உட்பட்ட ஐந்து பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்களை கைது செய்துள்ளனர்.


கைது செய்ய பட்டவர்களை விசாரித்த பொழுது " அவர்கள் வேலை முடிந்து துவாஸ் அவென்யூ 1 க்கு அருகிலுள்ள தங்கும் விடுதிகளுக்கு திரும்பிய வெளிநாட்டு ஊழியர்கள், விடுதிக்கு அருகே நிறுத்தப்பட்டிருக்கும் கனரக லாரிகளுக்கு பின்புறம் இந்த சட்டவிரோத சிகரெட்களை வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


அதை தொடர்து அருகிலுள்ள புதர்களில், சிவப்பு பிளாஸ்டிக் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3.3 கிலோ மெல்லும் புகையிலை, 45 சிகரெட் அட்டைப்பெட்டிகள் மற்றும் 10 பாக்கெட்டுகள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் அடங்கிய அட்டைப் பெட்டியை சுங்க துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்க சுங்க துறை அதிகாரிகள் தீவிரம்.


Related Posts

Post a Comment