சிங்கப்பூரில் காற்று மாசு எப்பொழுது குறையும் - சுற்றுச்சுழல் துறை அறிக்கை

Post a Comment
மறுபடியுமா .....!

சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் காற்றுத்தரம் மீண்டும் மோசமடைந்துள்ளது.

சிங்கப்பூரின் கிழக்கு தீவு பகுதியில்  கடந்த 2 நாள்களாகப் காற்றுத்தரம் சிறிது மேம்பட்டிருந்தது.

குறிப்பாக இன்று காலை 11 மணி நிலவரப்படி 24 மணிநேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு கிழக்குப் பகுதியில் 56ஆகப் பதிவானது.

சிங்கப்பூரில் உள்ள மற்ற பகுதிகளில் காற்றுத்தரம் சீரான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த 24 மணிநேரத்திற்கு அனைத்துப் பகுதிகளிலும் காற்றின் தரம் மிதமான நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வு 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த சனிக்கிழமை (7 அக்டோபர்) சுற்றுசுழுல் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது.

நேற்று மாலை தேசியச் சுற்றுப்புற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் மழையின் காரணத்தினால் இன்று புகைமூட்டம் தொடர்வதற்கான வாய்ப்பு குறைவு என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

சிங்கப்பூரில் நாளை (11 அக்டோபர்) அதிக மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதால் புகைமூட்டம் குறையக்கூடும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு இன்று தெரிவித்தது.

இலேசான காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த 24 மணி நேரத்துக்குக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு மிதமான நிலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் இன்று காலை காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு கிழக்குப் பகுதியில் 56ஆகப் பதிவானது.

பின்னர் சற்று நேரத்தில் காற்றுத்தரம் சாதாரண நிலைக்குத் திரும்பியது.

தீவின் பல பகுதிகளில் காலையிலும் மதிய வேளையிலும் இடியுடன் கூடிய மழை பெய்தது.

மாலை 6 மணி நிலவரப்படி 24 மணிநேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 59இலிருந்து 85 வரையிலான மிதமான நிலையில் இருந்தது.

சிங்கப்பூர் தீவு பகுதியில் பணிபுரியும் நண்பர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்களை உட்கொல்ங்கள்.

Related Posts

Post a Comment