சிங்கப்பூரில் உல்ல வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும் விடுதியின் தரத்தை பற்றி MOM அறிக்கை

Post a Comment

தரம் உயர்த்தபடுமா தங்கும் விடுதி...!

மனிதவள அமைச்சகம், சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு பணியாளர்கள் தங்கும் விடுதிகள், அவற்றின் தரத்தை உயர்த்த 2030ஆம் ஆண்டு வரை அவகாசம் கொடுத்துள்ளது. 

2040ஆம் ஆண்டுக்குள் அவற்றின் தரநிலைகள் மேம்படுத்தபட வேண்டும் என்று கூறியது. 

தொழிற்சாலைகளில் மற்றும் கட்டுமான தளத்தில் கட்டப்பட்ட அத்தகைய 1,000 விடுதிகள் 2030ஆம் ஆண்டுக்குள் உயரிய தரத்தை பூர்த்திசெய்ய வேண்டும் என்றும் மனிதவள அமைச்சு கூறியுள்ளாது. 

இன்று வெளியிடபட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. 

இச்செயலால் ஊழியர்களின் தங்கும் விடுதிகளில் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்த உதவும் என்பது குறிபிடதக்கது.

முன்னதாக 2020ஆம் ஆண்டு வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடங்களில் உலகை அச்சுறுத்திய COVID-19 நோய் வேகமாகப் பரவியதால் 2021இல் புதிய தரநிலைகள் அறிவிக்கப்பட்டன.

2023 ல் COVID-19 நோயின் மோசமான காலக்கட்டம் முடிந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

ஆயினும் புதிய ரகக் கிருமிகள் உருவாகின்றன என்று மனிதவள மூத்த துணையமைச்சர் கோ போ கூன் கூறினார்.

அதனால் முடிந்தவரை ஆயத்த நடவடிக்கைகளை விரைவாக எடுக்கவேண்டும் என்றார் அவர்.  

*மனிதவள அமைச்சு இடைக்காலத் தரநிலைகளின்படி, ஓர் அறையில் அதிகபட்சம் 12 பேர் குடியிருக்கலாம். 

*அறைகளில் கழிப்பிடமும் சேர்ந்து வரவேண்டும்.

*6 நபர்கள் வரையில் கழிப்பிடத்தின் குளியல் வசதி, கை கழுவும் தொட்டியைப் பகிர்ந்துகொள்ளாம் என்று தெரிவித்தது.

*படுக்கைகளுக்கு இடையில் குறைந்தது 1 மீட்டர் இருப்பதற்குப் பரிந்துரைக்கப்படுகிறது. 

*அறைக்குள் ஒவ்வொருவரும் புழங்குவதற்குப் 3.6 சதுரமீட்டர் தனிப்பட்ட இடம் இருக்கவேண்டும் மற்றும் அது 2040ஆம் ஆண்டிற்குள் 4.2 சதுரமீட்டருக்கு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் மனிதவள அமைசகம் அறிக்கை வெளியிட்டுல்லது.

Related Posts

Post a Comment