இனி பல் பிரச்னைக்காக இந்தியா செல்ல அவசியமில்லை ...!

Post a Comment

வெறும் 15 வெள்ளிதானா.....!

சிங்கப்பூரில் உள்ள HealthServe என்னும் உள்ளூர் தொண்டு நிறுவனம் வெளிநாட்டு ஊழியர்கள் வெறும் S$15 செலவில் தங்கள் பற்களைப் பரிசோதிபதற்க்கும் , சிகிச்சை பெறுவதற்க்கும் ஏற்பாடு செய்துள்ளது.

Health serve என்னும் தொண்டு நிறுவனம் ஏற்கனவே வெளிநாட்டு ஊழியர்களுக்காக GP கிளினிக் என்னும் பொது மருந்தகத்தை நடத்துகிறது.

சிங்கப்பூரில் உள்ள கட்டுமான, கடல் மற்றும் செயல்முறை துறைகளில் வேலைசெய்யும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இந்த பல் சேவையை முதன்மை பராமரிப்பு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சுமார் 2,500 வெளிநாட்டு ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு உள்ளதாக இத்தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.

பொதுவாக சிங்கப்பூரில் பல் மருத்துவரை சந்தித்து சொத்தை பற்களை அகற்ற அல்லது அடைக்க S$200 வெள்ளி வரை செலவாகும், ஆனால் இனி அந்த பிரச்சனை வெளிநாட்டு ஊழியர்களுக்கு இருக்காது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இத்தொண்டு நிறுவணத்தின் உதவியால் இனி பற்கள் பிடுங்க வெறும் S$30 செலுத்தினால் போதும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனை Geylang இல் இருக்கிறது, தேவையுள்ளோர் பயன்படுத்தி கொள்ளுங்கள். 

திங்கள் முதல் வெள்ளி வரை இயங்கும்.

எதற்க்கும் இந்த தொண்டு நிறுவணத்தின் திட்டதை நன்ங்கு தெறிந்து கொண்டு செயல்படுங்கள்.

உடனே இச்செய்தியை உங்கள் சிங்கப்பூர் நண்பர்களுடன் பகிருங்கள். 

Newest Older

Related Posts

Post a Comment